திங்கள் முதல் வழமைக்கு திரும்புமென லிட்ரோ அறிவிப்பு

எரிவாயு உற்பத்தி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் உதவியுடன் 10 மில்லியன் டொலர் எரிவாயு இறக்குமதியைப் பெற்றதாக லிட்ரோ நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் கீழ், எதிர்காலத்தில் 8,500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு வழங்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் நிலையான எரிவாயு விலைகள் இல்லாததாலும், கடந்த இரண்டு மாதங்களாக போதிய நாணயக் கடிதங்கள் வழங்கப்படாததாலும், பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்ததாலும் தற்போது அனைத்து எரிவாயு கையிருப்புகளும் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் 2,600 ரூபா மில்லியன் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

இவ்வாறான நிலையில் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்ட நேற்று வரை இம்மாதம் 13 நாட்களில் 800,000 எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்