கமல்ஹாசன் விக்ரம் படத்தை தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட இருக்கின்றதாம். மிகப்பிரமாண்டமான முறையில் அப்பாடலை படமாக்க திட்டமிட்டிருந்தார் ஷங்கர். ஆனால் கமல் தேர்தல் வேலைகளில் பிசியாக இருந்தார்.
இதையடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றார் கமல். எனவே இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பில் கமல் எப்போது கலந்துகொள்வார் என்பது தெரியாமல் உள்ளது. அப்பாடலை படமாக்கினால் தான் படத்தை ரிலீஸ் செய்யமுடியும். ஆனால் அதற்குள் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது.
Post Views: 67