தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் 5, 000 ரூபா!

அரச பணியாளர்களுக்காக வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள, 5,000 மாதாந்த மேலதிக கொடுப்பனவை, அரசின் வசமுள்ள நிறுவனங்களினது ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் திறைசேரி செயலாளரால் தற்போது அனுப்பப்பட்டுள்ளது.

இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ள இந்த 5,000 ரூபா கொடுப்பனவை அரச அனுசரனையுடன் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பான தீர்மானத்தை அதன் பணிப்பாளர் சபை மேற்கொள்ளும்.

அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவினால் குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொடுப்பனவு அற்ற விடுமுறையில் உள்ள ஊழியர்களுக்கு இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்றும், அரைவாசி கொடுப்பனவுடன் விடுமுறையில் உள்ள ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவில் 50 சதவீதம் மாத்திரம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறே, நாளாந்த வேதனம் பெறும் ஊழியர்கள், அனைத்து வேலை நாட்களிலும் கடமைக்கு சமுகமளித்திருந்தால் மாத்திரமே குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும், அவ்வாறல்லாதவிடத்து குறித்த ஊழியர்கள் கடமைக்கு சமுகமளித்த நாட்களின் எண்ணிக்கை ஏற்ப குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்