நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது.
அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலை அடுத்து போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்தது.
நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் ஒன்றை குறித்த சங்கத்தினர் அனுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், டீசல் விலை அதிகரிப்பை மாத்திரம் குறித்த கட்டண அதிகரிப்பின்போது கருத்திற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பையும் கருத்தில் கொண்டு தங்களுடைய கட்டணத்தையும் திருத்தியமைக்குமாறு தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அந்தக் கோரிக்கைக்கு இணங்கியிருக்கவில்லை. அதனை தொடர்ந்து தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
இலங்கையின் எரிபொருள் போக்குவரத்தில் 80% தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com