உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கியுள்ளதால், தங்கம், மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது
இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன. ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரைகளையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா ஜனாதிபதி இன்று காலை உத்தரவிட்டார். இதையடுத்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கில் ரஷிய படைகள் குண்டுகளை வீசத் தொடங்கின.
ஒடேசா, கார்க்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்களுக்கு சில லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்து தங்கள் முதலீடுகளை எடுக்கின்றனர். இதே போல் ஆபரணத் தங்கம் விலை இன்று மட்டும் சவரனுக்கு சென்னையில் ரூ.864 அதிகரித்து ரூ.38,616க்கு விற்பனையாகிறது. மேலும்,
ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 100 அமெரிக்க டோலர்களாக உயர்ந்தது.மசகு எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு மசகு எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தொட்டுள்ளது. மேலும் ரஷிய – உக்ரைன் போரால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் கோதுமை விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com