ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கொவிட் -19 நெருக்கடியால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தால் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை.
எனவே ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், எனவே தமக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
Post Views: 59