வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கான ஹோட்டல் சேவை வழங்குனர்கள் அதற்குரிய கட்டணத்தை சுற்றுலாப்பயணிகளிடமிருந்து டொலர் வடிவில் மாத்திரம் அறவிடுவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் நாணயச்சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகக் கடந்த 21 ஆம் திகமி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் பதிவுசெய்யப்பட்டிருப்பதுடன் அதற்கான அனுமதிப்பத்திரத்தையும் கொண்டிருக்கக்கூடிய ஹோட்டல் சேவை வழங்குனர்கள், வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்கும்போது அதற்கான கட்டணத்தை டொலர் வடிவில் அறவிடுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சுற்றுலாப்பயணிகளிடமிருந்து அறவிடப்படும் டொலரை மூன்று நாட்களுக்குள் உரிமம்பெற்ற ஏதேனுமொரு வங்கியின் ஊடாக அதனை மாற்றவேண்டும் என்றும் அவ்வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கையிலுள்ள ஹோட்டல் சேவை வழங்குனர்களுக்கான கட்டணத்தை வரவட்டை அல்லது செலவட்டை அல்லது பயண அட்டை போன்ற இலத்திரனியல் அட்டைகளைப் பயன்படுத்தி சேவை வழங்குனரின் வெளிநாட்டு நாணயக்கணக்கிற்கு மாற்றமுடியும்.
மேலும் ஹோட்டல் சேவை வழங்குனர்கள் எவரேனும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடமிருந்து சேவை வழங்கலுக்கான கட்டணத்தை இலங்கை ரூபா வடிவில் அறவிட்டிருப்பின், சம்பந்தப்பட்ட சுற்றுலாப்பயணிகள் டொலர் வடிவில் இலங்கைக்குள் கொண்டுவந்த பணத்தை நாட்டிலுள்ள உரிமம்பெற்ற வங்கிகள் ஊடாகவோ அல்லது அங்கீகாரம்பெற்ற நாணயமாற்றல் நிலையங்கள் ஊடாகவோ ரூபாவாக மாற்றினார்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியமாகும் என்று அவ் அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன, ‘வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கான ஹோட்டல் சேவை வழங்கல் கட்டணங்கள் டொலர் வடிவில் அறவிடப்படுவதைக் கட்டாயமாக்குவதற்கு மத்திய வங்கி தீர்மானித்திருக்கின்றது.
இலங்கை தொடர்ச்சியாகத் தவறான தீர்மானங்களை மேற்கொள்வதுபோல் தெரிகின்றது. அதுமாத்திரமன்றி ஒன்றை விடவும் மற்றொன்று பெரிதும் தவறான தீர்மானமாக இருக்கின்றது’ என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com