சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

சீனா தனது பயிர்ச்செய்கைக்கு அதிகளவில் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாகவும் இலங்கையை விட மூன்று நான்கு மடங்கு இரசாயன உரங்களை சீனா பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், உரத்தை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இன்று செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அசோக அபேசிங்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com