வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் அம்பலாங்கொடை மாதம்ப தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் இரட்டைச் சகோதரர்கள் வர்த்தகப்பிரிவில் மூன்று பாடங்களிலும் அதி விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பதுன் சம்பத் மற்றும் மிதுன் சம்பத் ஆகிய இரட்டை சகோதரர்களே திறமை சித்திகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்களில் பதுன் சம்பத் பாடசாலையின் முதன்மை மாணவர் தலைவராகவும், மிதுன் சம்பத் துணை முதன்மை மாணவர் தலைவராகவும் உள்ளனர்.
இந்த இருவரில் பதுன் சம்பத் சாதாரண தர பரீட்சையில் 8 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், அதே பரீட்சையில் மிதுன் சம்பத் 7 ஏ சித்திகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 184