சரக்குக் கப்பலில் தீ சொகுசுக் கார்கள் எரிந்து நாசம்

வால்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே திடீரென தீப்பிடித்தது.

தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போர்த்துக்கல் கடற்படை மற்றும் விமானப்படை விரைந்து கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டு ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் சிக்கிய கார்களின் எண்ணிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஃபெலிசிட்டி ஏஸ் ரக கப்பல் சுமார் 3 கால் பந்து விளையாட்டு மைதானம் அளவு பெரியதாகும். இதில் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யவிருந்த லம்போர்கினி, போர்ஷே, அவுடி உள்பட சுமார் 3965 சொகுசுக் கார்கள் இருந்தன. 100க்கும் மேற்பட்ட கார்கள் டெக்சாஸில் உள்ள துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட விருந்தன.

இந்நிலையில், கப்பலில் இருந்த சொகுசுக் கார்கள் எரிந்து நாசமாகியுள்ளன. 2019ஆம் ஆண்டில் கிராண்டே அமெரிக்கா கப்பல் தீப்பிடித்தபோது சுமார் 2000க்கும் மேற்பட்ட சொகுசுக் கார்கள் தீயில் எரிந்து மூழ்கின.

நேற்றிரவு நிலவரப்படி கப்பலின் தீயை முழுமையக அணைத்துவிட்டு கப்பலை இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்