சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து கைப்பேசி சேவை வழங்குநர்களிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் இன்று (03) காலை அறிவித்திருந்தார்.
இதன்படி, நேற்று (02) நள்ளிரவு முதல் நாட்டில் சில முக்கிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பேஸ்புக், யூடியுப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படுள்ளன.
VPN ஊடாகவே சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிக்கிறேன் – நாமல் ராஜபக்ஷ
சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதனை தாம் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொனறை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதில், சமூக வலைத்தளங்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகள் பயனற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தானும் தற்போது VPN வழிமுறையைப் பயன்படுத்தி சமூக வலையமைப்புகளை பயன்படுத்துவதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, மேலும் நெருக்கடிகளை உருவாக்காமல், பிரச்சினைகளுக்கான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் ட்விட்டர் பதிவின் மூலம் கோரியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கமைய சமூக வலைத்தளங்கள் முடக்கம்
பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் இன்று (03) காலை அறிவித்தார்.
நேற்று (02) நள்ளிரவு முதல் நாட்டில் சில முக்கிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முகப்புத்தகம், யூடியுப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்படுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com