சந்தையில் மீண்டும் அரிசி விலை உயர்வு

கடந்த வாரத்தில் சந்தையில் அனைத்து வகையான அரிசிகளின் விலைகளும் மீண்டும் உயர்வடைந்துள்ளன.

இவ்வாறு விலை அதிகரிக்கப்படுவதால் உள்நாட்டு அரிசிகளை விற்பனை செய்வது பாரிய சவாலாக உள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் சம்பா அரிசி கிலோ ஒன்று 165 ரூபாவுக்கும், நாட்டரிசி கிலோ ஒன்று 148 ரூபாவுக்கும் வெள்ளை அரிசி 157 ரூபாவுக்கும் சிவப்பரிசி 161 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது வெள்ளை அரிசியை தவிர ஏனைய அனைத்து அரிசி வகைகளின் விலைகளும் 5 ரூபாவுக்கும் அதிக தொகையால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை குறிப்பிட்டளவில் குறைந்து காணப்படுகின்றது.

அதற்கமைய, பொன்னி சம்பா கிலோ ஒன்று 126 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி 120 ரூபாவுக்கும் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி 122 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், நுகர்வொர் உள்நாட்டு அரிசிகளை கொள்வனவு செய்யும் விகிதம் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள தெரிவிக்கின்றனர்.


⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்