சட்டவிரோதமாக பெற்றோல் விற்பனை செய்த நபர் கைது!

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக பெற்றோலை சேமித்து வைத்து, விற்பனை செய்த சந்தேகநபர் காவல்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு காவல்துறை விசேட அதிரடி படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு- வசந்தபுரம் பகுதியில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வர்த்தக நிலையமொன்றில் சட்ட விரோதமாக பெற்றோலை மறைத்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 226 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரனைகளுக்காக புதுக்குடியிருப்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்