சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளது.
கோழி இறைச்சி அடங்கிய உணவுப் பொதிகளின் விலை அதிகரித்துள்ளதால், கோழி இறைச்சியின் விலையும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதை அடுத்து, கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டார்.
தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 650 ரூபா முதல் 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதால் கோழி தீவனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com
Post Views: 46