பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 80 ரூபா விலையில் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா வழங்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது.
இதற்கு கடந்த வாரம் அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்திருந்தது. அதற்கமைய, நுவரெலியா – வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் இந்நிகழ்வு இன்று வைபவ ரீதியாக இடம்பெற்றது.
இதில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 71 குடும்பங்களுக்கு கோதுமை மா வழங்கி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கலந்து கொண்டார்.
எதிர்வரும் காலங்களில் ஏனைய பகுதிகளில் இந்த திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com