கொழும்பு துறைமுக நகரில் ‘செல்ஃபி’ எனப்படும் தாமி படம் எடுப்பதற்கும், தனிப்பட்ட காணொளிகளைப் பதிவு செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என கொழும்புத் துறைமுக நகர் திட்ட நிறுவனம் அறிவித்துள்ளது.
தாமி படங்களை எடுப்பதற்கும், காணொளிகளைப் பதிவு செய்வதற்குக் கொழும்புத் துறைமுக நிறுவனம் கட்டணம் அறவிடுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கொழும்புத் துறைமுக நகர பகுதியில், விழாக்கள் மற்றும் வணிக ரீதியில் பதிவு செய்யப்படும் படங்கள் மற்றும் காணொளிகளுக்குக் கட்டணம் அறவிடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, தனிப்பட்ட நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள், வணிக விளம்பரங்கள் ஆகியனவற்றுக்காக எடுக்கப்படும் படங்கள் மற்றும் காணொளிகளுக்குக் கட்டணம் அறவிடப்படும் முறைமை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்புத் துறைமுக நகர திட்ட நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகநகர மரீனா நடைபாதையில் புகைப்படம் எடுப்பதற்கான கட்டண விபரங்கள் வெளியீடு
கொழும்பு துறைமுக நகரில் பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறக்கப்பட்ட மரீனா நடைபாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களின் விபரத்தை கொழும்பு போர்ட் சிட்டி (தனியார்) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2 பேர் தொடக்கம் 5 பேர் பங்கேற்புடன் குறித்த சூழல் பின்னணியை பயன்படுத்தி 3 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக புகைப்படம் எடுப்பதற்கு 30 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படும்.
மேலும் 6 பேர் தொடக்கம் 10 பேர் பங்கேற்புடன் 1-3 வரையான மணித்தியாலங்களுக்குள் படப்பிடிப்பில் ஈடுப்பட்டால் 50 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படும்.
அத்துடன் 10இற்கும் மேற்பட்டவர்கள் மூன்று மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் படப்பிடிப்பில் ஈடுப்பட்டால் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுப்படும்.
10 இற்கும் குறைவான எண்ணிக்கையிலானோர் ஒன்று முதல் 3 மணித்தியாலங்களுக்குள் படப்பிடிப்பில் ஈடுப்படும் போது ஒரு இலட்சம் ரூபா கட்டணம் அறவிடப்படும்;.
அத்துடன் 10 பேருக்கு மேல் வர்த்தக நோக்கில் படப்பிடிப்பில் ஈடுப்பட்டால் மூன்று மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்கான கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டண பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com