இலங்கையில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணத்தினால் பலர் தங்களின் தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களது குடும்பத்தினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம், குறிப்பிட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





