கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் உயர்வு!

கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 60சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

துறைமுக சேவை ஒன்றிணைந்த சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இன்று இந்த விடயம் தொடர்பில் பல துறைமுக சேவை சங்கங்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடியிருந்தன.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் கொள்கலன் உள்ளிட்ட சகல போக்குவரத்து கட்டணத்தையும் 60 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது

தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு வாகனங்களுக்கான டயர்கள் உள்ளிட்ட உதிரிப்பாகங்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள குறிப்பிட்டார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்