இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொழில் ஒதுக்கீட்டை தென்கொரியா இரட்டிப்பாக்கியுள்ளதாக அந்த நாட்டு அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் கூ யுன்-சியோல் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அவர், அண்மையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்துள்ளார்.
மருந்து உற்பத்தி, சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கழிவுகளை அகற்றுதல், எரிசக்தி, தொழில்நுட்பம், தொழில் பயிற்சி மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் கூ யுன்-சியோல் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி ஒதுக்கீடுகளுக்காக கொரியாவின் முன்னுரிமை நாடுகளில் ஒன்றாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com