தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அச்சிடுவதற்கான காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை 3 மடங்கினால் சந்தையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் புத்தக வெளியீட்டாளர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, சந்தையில் காகிதங்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.
பேனை மற்றும் பென்சில் ஆகியவற்றின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் விற்பனையாளர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்தின் அச்சக பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச அச்சகத்தினர் சங்கத்தின் ஆலோசகரும், முன்னாள் செயலாளருமான அதுல இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
காகித தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் அதிவிசேட வர்த்தமானியோ அல்லது சாதாரண வர்த்தமானியோ வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும்.
அத்துடன் அபராத சீட்டை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்படும் நிலையில், அதனால் அரசாங்கத்திற்கான வருமானமும் இல்லாது போகும் என அரச அச்சகத்தினர் சங்கத்தின் ஆலோசகரும், முன்னாள் செயலாளருமான அதுல குறிப்பிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com