சிசுக்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சிய சாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, கிளினிக்குகளுக்கு வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தினந்தோறும் திரிபோஷா உற்பத்திக்கு சுமார் 70 மெட்ரிக் தொன் சோளம் தேவைப்படுகிறது.
தேவையான அளவு மக்காச்சோளத்தை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால், சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்த போதிலும், அதுவும் முடங்கியுள்ளது.
மேலும், திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான பால் மாவைப் போதுமான அளவு பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com