மக்களின் பொருளாதார நிலைமை காரணமாக கடன் தவணை செலுத்துவது இன்று முதல் இடைநிறுத்தப்படும் என குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் ஒன்றிணைந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்று (09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய, ஐந்து விடயங்களை முன்வைத்து, குத்தகை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்படும் எனவும், அதற்கான உடன்பாடு எட்டப்படும் வரை இந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
குத்தகை மற்றும் கடன் தவணையின் கீழ் பெறப்பட்ட வாகனங்களைக் கொண்டு பல்வேறு தொழில்களை மேற்கொள்கின்ற 200,000 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் தமது சங்கத்தில் இருப்பதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிடுகின்றார்.
டீசல், பெற்றோல் விலை அதிகரித்துள்ள இவ்வாறான நிலையில் குத்தகை அல்லது கடனை செலுத்த முடியாத நிலை காணப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





