இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை சுமார் 30% வரை உயர்த்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் அட்டைகள் மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி வீத எல்லையை கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி முதல் நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனையடுத்து, கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் 18 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதமாக அதிகரித்தது.
எனினும், தற்போது அது 30% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





