வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்து வதற்கான யோசனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள – தமிழ் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கை யிலுள்ள தங்கள் குடும்பங்களுக்கு செலவு செய்ய அதிக பணம் அனுப்புவது வழக்கம்.
எவ்வாறாயினும், இலங்கையில் டொலர் நிலைமையின் தற்போதைய சூழலில், பல வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டவிரோதமான வழிகள் மூலம் தமது பணத்தை இலங்கைக்கு அனுப்புகின்றனர். இந்நிலையால், நாட்டின் அந்நியக் கையிருப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்த பட்சம் 240 ரூபாவை செலுத்தினால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தமது பணத்தை உள்ளூர் வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்ப முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, தற்போது ஒரு டொலருக்கு வழங்கப்படும் 10 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவை மேலும் 30 ரூபாவால் அதிகரிக்க அமைச்சர் அமைச்சரவைக்கு முன்மொழிவார் என தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
நிதியமைச்சானது அரச வங்கிகள் மற்றும் வர்த்தக வங்கிகளுடன் இணைந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் இலங்கையின் பொருளா தாரத்துக்கும் நன்மை பயக்கும் வகையில் டொலர்களை அனுப்புவதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.
ஒரு டொலருக்கு 240 ரூபா – நிமல் சிறிபால டி சில்வா
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துவதற்கான யோசனை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கு உள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு அதிக பணம் அனுப்புவது வழக்கம். எவ்வாறாயினும், இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தமது பணத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு அனுப்புகின்றனர்.
இந்நிலைமை காரணமாக நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஒரு அமெரிக்க டொலருக்கு 10 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படுவதுடன் அதனை மேலும் 30 ரூபாவால் அதிகரிக்க அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
இதன்படி அமெரிக்க டொலரொன்றுக்கு 240 ரூபா வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com