ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்முதல் செய்துள்ள லிட்ரோ நிறுவனம்

நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம், 100,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயுவை வெற்றிகரமாக கொள்முதல் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த மொத்த எரிவாயுவிற்கு 90 மில்லியன் செலவாகவுள்ள நிலையில், அதில் 70 மில்லியன் டொலரை உலக வங்கி நிதியுதவியாக வழங்கவுள்ளதோடு, மீதமுள்ள 20 மில்லியன் டொலரை லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் குறித்த எரிவாயு நான்கு மாதங்களுக்கு நாட்டிற்கு வழங்க போதுமானதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டள்ள நிலையில், 70% எரிவாயு உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும். இதன் மூலம் 5 மில்லியன் 12.5 கிலோ சிலிண்டர்கள், 1 மில்லியன் 5 கிலோ சிலிண்டர்கள் மற்றும் 1 மில்லியன் 2.5 கிலோ சிலிண்டர்கள் பெறப்படவதோடு, மீதமுள்ள 30% எரிவாயு வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இதன்போது லிட்ரோ நிறுவனத்தால் 20 மில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 33,000 தொன் எல்பிஜி எரிவாயு ஜூலை முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தப்பிடத்தக்கது.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்