கடந்த மார்ச் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் 23.17 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25.81 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பொதி செய்யப்பட்ட தேயிலை ஏற்றுமதி பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் இலங்கை தேயிலையை அதிக அளவில் இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவாகியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
துருக்கி, லிபியா, சீனா, சவுதி அரேபியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் இலங்கை தேயிலையினை இறக்குமதி செய்வதில் அதிக அவதானத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com