நாட்டில் அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். அந்தவகையில் எரிபொருள், எரிவாயு வரிசையில் தற்பொழுது மருந்துப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் 250 அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் மருந்து பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாகவும் 250 மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அரசமருந்து கூட்டுத்தாபனம் சுகாதாரத்துறைக்கு அறிவித்துள்ளது.
உணவுப்பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை தியாகம் செய்தாலும்கூட மருந்துப்பொருட்களை எவ்வாறு கைவிடுவது என அப்பாவிநோயாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இலங்கையை பொருத்தமட்டில் அது ஒன்றே இலவசமாகவும் தாராளமாகவும் பெறக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் மருந்துப்பொருட்களும் கிடைக்காது போனால் நோயாளர்கள் எவ்வாறு தாங்கிக்கொள்வார்கள் என்பது பற்றி சிந்திப்பது அத்தியவசியமாகும்.
எந்தவொரு தேவையையும் பிற்போடலாம். ஆனால் மருத்துவத்தேவைகளை எவ்வாறுபிற்போடுவது என கேள்வியெழுப்பும் மக்கள் மூன்றுவேளை மருந்துக்கு பதிலாக இரண்டுவேளை மருந்தை மருந்தை உட்கொள்வதா எனவும் ஆதங்கப்படுகின்றனர்.
நாட்டில் கொவிட் வைரஸ் காரணமாக அன்றாடம் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.
மறுபுறம் போஷாக்கின்மையால் மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகள் வயோதிபர்களெனபலதரப்பட்டோரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகிவருவதை காணமுடிகிறது.
இவற்றுக்கு மத்தியில் இரு வயோதிபர்கள் வரிசையில் நின்றபோது மயங்கிவீழ்ந்து உயிரிழந்துள்ளனர். மேலும் எரிபொருள் நிரப்புவதற்கு வந்த இளைஞரொருவர் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். அன்றாட நிலைமை மோசமடைந்து வருகின்றது.
எருடைமாட்டின் மீது மழைபெய்தது போல எவரும் கணக்கில் எடுப்பதாக இல்லை. மக்களின் துயரத்தை துடைக்க ஆட்சியாளர்களோமக்கள் பிரதிநிதிகளோ முன்வராதநிலையில் முழுநாடுமே மெல்ல மெல்ல ஸ்தம்பிதம் அடைந்து வருகின்றது.
எரிபொருள் நிரப்புநிலையங்கள் இரண்டாவது வாரமாக செயழிலந்து வருகின்றது. பலவற்றில் தடுப்புகயிறு போடப்பட்டு வாகனங்கள் உள்நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதே நிலைமை தொடருமானால் நாடு எங்கு செல்லுமென்று எவராலும் எதிர்வுகூற முடியாத நிலைமையே தோன்றுவதாக இருக்கும். தற்போதையநிலைமையை உணர்ந்து அரசாங்கம் ஆக்கபூர்வமான முடிவை எடுப்பதுஇன்றியமையாதது.
வெறுமனே டொலர் வருவதாகவும் கப்பல் வருவதாகவும் நிவாரணம் தருவதாகவும் கூறிமக்களை மென்மேலும் நெருக்கடிக்கு தள்ளாது உண்மை நிலைவரத்தை அரசாங்கம் வெளிப்படுத்துவது அவசியம்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com