எரிவாயு தரையிறக்குவதில் சிக்கல்!

சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடனுக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 6 மில்லியன் அமெரிக்க டொலர் இன்றைய தினத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த தொகையினை செலுத்துவதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொள்வதா? அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவிடம் எமது செய்தி சேவை வினவியது,

அதற்கு பதிலளித்த அவர், அது குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்பதுடன், லிட்ரோ நிறுவனத்தின் தலைவரிடம் வினவுவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த எரிவாயு தாங்கிய கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய களஞ்சியசாலையில் கையிருப்பு இல்லாமை காரணமாக எரிவாயு விநியோகத்தை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் முன்னதாக இடைநிறுத்தியிருந்தன.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்