எரிபொருள் விநியோகம் வழமை ….

இன்று (03) தொடக்கம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களில் விநியோக நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தேவையற்ற பீதியின்றி எரிபொருளை சேகரிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தற்பொழுது நாடு முழுவதிலும் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதுடன், இது இன்றைய தினத்திற்கு பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் என்று எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தாமதம் இன்றி எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள 35 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் டீசல் இன்று (03) மாலையளவில் இறக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக இந்த டீசலில் 8 ஆயிரம் மெட்ரிக் தொன் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக இன்று (03) நாடு முழுவதும் 7 ½ மணி நேர மின்துண்டிப்பு இடம்பெறவுள்ளது.

காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையில் 5 மணித்தியாலயங்களுக்கும், மாலை 6 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரையில் 2.30 மணித்தியாலயங்களுக்கும் மின் துண்டிப்பு இடம்பெறும் என்று பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை ,எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு பின்னர் மின் துண்டிப்பு இன்றி மின்விநியோகத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்