எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் மேலதிகமாக உள்ளமையால், சில எரிபொருள் தாங்கி ஊர்திகள் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மற்றுமொரு கப்பலில் இருந்து, முத்துராஜவளையில் பெற்றோலை தரையிறக்கும் பணிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.
டீசல் கப்பலொன்று வந்துள்ள நிலையில், அந்த டீசலை கொலன்னாவையில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தியாவிலிருந்து மற்றுமொரு எரிபொருள் கப்பல் எதிர்வரும் முதலாம் திகதி நாட்டுக்கு வரவுள்ளது.
இதேநேரம், கொழும்பின் சில பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமையால், எரிபொருள் தாங்கிகள் இவ்வாறு மீளத் திரும்பியதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து எமது செய்திச் சேவை ஆராய்ந்த போது பதிலளித்த இலங்கை பெற்றோலிய களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் முகாமையாளர், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்ற சில பெட்ரோல் தாங்கிகள், இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும், இன்றைய தினமும் பல பிரதேசங்களில் எரிபொருள் இன்மையால், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அத்துடன், பல பாகங்களில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால், வாகனங்களும், பொதுமக்களும் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com