எரிபொருளை சேமித்து வைத்திருந்த ஐவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து அதிக விலைக்கு விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை மாவத்தகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாவத்தகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பஹதெனிய, மஸ்வெவ, வேஉட, வெலிகும்புர ஆகிய பகுதிகளிலேயே அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 315 லீற்றர் டீசல் மற்றும் 20 லீற்றர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் 36 மற்றும் 59 வயதுடைய அம்பகொட்டே, பிலஸ்ஸ, கலஹா மற்றும் மாவத்தகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மாவத்தகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த மற்றுமொரு சந்தேக நபரை மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 550 லீற்றர் டீசல் மற்றும் 258 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மயிலவட்டுவான் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இன்று ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, சந்திவெளி காவல்துறையினர் குறிப்பிட்டனர்.


புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com


🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com


யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்