எதிர்வரும் 10 வருட காலப்பகுதியில் இலங்கை உட்பட சர்வதேச நாடுகளில் உருளைக்கிழங்கின் உற்பத்தி தற்போதைய நிலையை விட இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், உலகளாவிய உணவு பாதுகாப்பிற்கு உருளைக்கிழங்கு மேலும் அதிக பங்களிப்பினை வழங்கும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கியூ.யூ. டொன்கியு தெரிவித்துள்ளார்.
டப்ளினில் நடைபெறும் 11ஆவது உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதான உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலக மக்களின் முக்கிய மூன்றாவது உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு திகழும் நிலையில், கோடிக்கணக்கான மக்கள் அதனை விரும்பி உண்பதாக அறிவித்துள்ளார்.
குறைந்த அளவிலான கொழுப்பு, அதிக நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான கார்போஹட்ரேட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை நிறைவாக கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, ஏனைய பயிர்களை விட குறைவான பசுமை இல்ல வாயு உமிழ்வினை உருவாக்கின்றது.
இந்த நிலையில், மரபணு தோற்றத்தை கொண்ட உருளைக்கிழங்கு தற்போது 2 கோடி ஹெக்டயர்களில், 150 நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இதன் மூலம் 35 கோடியே 90 இலட்சம் டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com





