எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது – ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிப்பா?

10 ஆயிரம் மெற்றிக் டன் எரிபொருள் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து கிடைப்பதன் காரணமாக மின்துண்டிப்பு இடம்பெறமாட்டாது என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் உதய கம்மன்பில, நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 மெட்றிக் டன் படி 8 நாட்களுக்குத் தேவையான எரிபொருளை இன்று விடுவிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த எரிபொருள் இன்று முதல் மின்சார உற்பத்தி பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கி நேற்று நிதி வழங்கியதன் காரணமாகக் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த எரிபொருள் அடங்கிய கப்பலிலிருந்து 37,000 மெட்றிக் டன் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.

அதிலிருந்து 10,000 மெட்றிக் டன் எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிப்பா?

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறி வித்துள்ளனர்.

நாட்டில் அமைந்துள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இயங் குவதற்குத் தேவையான எரிபொருள் இன்மையால் மின் துண் டிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் குழு உறுப்பினர் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார்.

நாளாந்த மின் உற்பத்திக்கு அத்தியாவசியமான எரிபொருள் பற்றாக் குறை நிலவுவதால் மின் துண் டிப்பை அமுல்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேர அட்டவணை தொடர்பில் அவர் அறிவித்தார்.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகப் பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டகங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வைத்தியசாலைகள் போன்ற அத்தியாவசிய மற்றும் அவசரக்கால பொதுச் சேவை பகுதிகளுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப் பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.


⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com

சிறப்புச் செய்திகள்