எதிர்வரும் 7ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை விவசாயிகளுக்கு உரத்தை விநியோகிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
இதற்காக, விவசாய அமைச்சின் கீழ் செயற்படும் அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் டன் யூரியா உரம் எதிர்வரும் 6ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளது.
அதனை எதிர்வரும் 7ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டே விவசாய அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





