அரிசிக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலை, தற்போது சந்தையில் அரிசி விற்பனையாகும் விலையை விடவும் அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் எமது செய்திச் சேவை வினவிய போது கருத்து தெரிவித்த அரிசி உற்பத்தியாளர்கள், நெல்லின் தற்போதைய விலையை கருதிக்கொண்டு வர்த்தக அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைய, இந்த உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வரையில் அரிசிக்காக உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இதற்கமைய வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி ஒரு கிலோகிராம் 220 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கீரி சம்பா ஒரு கிலோகிராம் 260 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நிவாரண விலை அடிப்படையில் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசிக்கு இந்த விலை கட்டுப்பாடு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com