மோசமான பொருளாதாரம்! இலங்கை வீழ்ந்தது எப்படி..?

இலங்கை பொருளாதாரம் மோசமான சூழலுக்கு சென்றதற்கு பின்னணியில் இருக்கும் தவறான பொருளாதார கொள்கையை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

உலக சுற்றுச்சுலாவின் பேரரசியாக திகழ்ந்த இலங்கை தீவு இன்று உள்ளூர் வாசிகள் வசிப்பதற்கே லாயக்கற்றதாய் மாறிவருகிறது.

இலங்கையில், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உணவுக்கு தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பின்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தருவதில், டீ, ரப்பர், ஆடை ஏற்றுமதி, சுற்றுலா ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

உள்நாட்டு போருக்கு பின், அதிகளவு கடன்களை வாங்கி குவித்ததால், 2019ல் இலங்கையின் சர்வதேச கடன் 33 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 சதவீதமாகும்.

இலங்கையின் தேசிய செலவினம், வருவாயைவிட அதிகமாக இருப்பதாகவும், வர்த்தகம் செய்யக்கூடிய பொருட்கள், சேவைகளின் உற்பத்தி போதுமானதாக இல்லை எனவும் அப்போதே எச்சரித்தது ஆசிய வளர்ச்சி வங்கி.

இந்த நிலையில், இலங்கை சுற்றுலாவிற்கு பேரிடியாக அமைந்தது 2019 ஈஸ்டர் தாக்குதலும், கொரோனா கோரத்தாண்டவமும். 2018 ம் ஆண்டு மட்டும் சுற்றுலா துறை மூலம் 5.6 பில்லியன் டாலர் கிடைத்திருந்தது. சுற்றுலா வீழ்ச்சியுற்ற நிலையில், அந்நிய செலாவணி அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

2019 ல் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே அரசு, வாட் வரியை 15% லிருந்து 8% ஆக குறைத்ததால் அரசின் வரிவருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டது. கொரோனாவால் தேயிலை, ரப்பர், ஆடைகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே அந்நிய செலாவணி வெளியே செல்வதை தவிர்க்க இறக்குமதியை கட்டுப்படுத்திய அரசு, 2021 மே மாதம் உர இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தியது. முறையான திட்டமிடல் இல்லாமல், அதிரடியாக இயற்கை விவசாயத்திற்கு மாறியதால் வேளாண் உற்பத்தி கடும் சரிவை சந்தித்தது.

பணவீக்கம் அதிகரித்து உணவுப்பொருட்கள் விலையேறிய நிலையில், உணவுப்பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது இலங்கை.

2019 ஆம் ஆண்டு 7.5 பில்லியன் டாலராக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த பிப்ரவரியில் 2.31 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. அதாவது இலங்கை ரூபாயில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 236 கோடியிலிருந்து, 68 ஆயிரத்து 756 கோடியாக சரிந்துள்ளது.

இதற்கிடையே இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் பிப்ரவரி நிலவரப்படி 51 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதில் உடனடியாக செலுத்த வேண்டிய கடன் 7 பில்லியன் டாலர்.

நிலையை சாமளிக்க இந்தியாவிடம் கடன் பெற்றுள்ள இலங்கை, சீனா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கவும் முயற்சித்து வருகிறது.
thanthitv

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்