இலங்கை ரூபாவின் மதிப்பு ஏன் குறைந்தது

எமது நாட்டில் என்ன பிரச்சினை? தற்போது எமது நாட்டில் பொருட்களின் விலை கூடிக்கொண்டு போகின்றதே என்ன காரணம்,

*உலக சந்தையில் எமது நாட்டு ரூபாபிற்கான மதிப்பு குறைந்துகொண்டு வருகின்றது.

அதனால் நாம் மசகு எண்ணெய் போன்ற பொருட்களை இறக்குமதி செய்யும்போது டொலரிற்கு பெறுமதியான ரூபாயினை அல்லது டொலரினை முன்னைய காலங்களில் கொடுத்ததை விட அதிகபடியாக கொடுக்கவேண்டியுள்ளது.

-சரி இலங்கை ரூபாவின் மதிப்பு ஏன் குறைந்தது,

*ஒருவரிடமோ அல்லது ஒரு நாட்டிடமோ பொறுமதியான ஒன்றோ அல்லது பல பொருட்கள் இருந்தால் அவருக்கு அல்லது அந்த நாட்டிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்குமல்லவா.

ஆனால் எமது நாட்டில் என்ன நடந்தது.

1.மதிப்பையும் பெறுமதியையும் சேர்க்கக்கூடிய உற்பத்திகள் நாளுக்கு நாள் குறைவடைந்து வந்துவிட்டது. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு இறக்குமதியை மட்டுமே எதிர்பாத்திருப்பவர்களாக மாறிவிட்டோம்.

எந்த அளவிற்கு என்றால் வீட்டில் குப்பை கூட்டும் குப்பைவாரி தொடங்கி கையால் புல்லு அடிக்கும் பட்டம் வரை நாம் இறக்குமதி செய்தே பாவித்துவருகின்றோம்.

2.உலக சந்தையில் நன்மதிப்பு பெற்ற எமது நாட்டு தெயிலை,கறுவா,மற்றும் இறப்பர் முதலிய திரவியங்கள் தமது தரத்தை இழந்ததால் எமது நாட்டு பொருட்கள் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி மட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அதற்கு என்ன காரணம்,திட்டமிடப்படாது கால அவகாசமோ பரீட்சார்த்தமோ,அல்லது தற்துணிவுள்ள கல்விமான்களின் ஆலோசனையோ இன்றி எமது அரசினால் அமுல்படுத்தப்பட்ட சேதன விவசாய கொள்கையினால் ஏற்றுமதிப்பயிர்களின் தரமும் பாதிக்கப்பட்டுவிட்டது.

-சரி இப்பொழுது நாளுக்கு நாள் நடக்கும் பொருட்களின் அதிகரித்த விலையேற்றத்திற்கு தற்போது உள்ள அரசாங்கமா காரணம், இந்த அரசாங்கம் மாறினால் பொருட்களின் விலையில் குறைவோ அல்லது தட்டுப்பாடு அற்ற நிலையோ ஏற்படுமா.

*முழுக்க முழுக்க தற்போது உள்ள அரசாங்கத்தின்மீது பழியினை போட்டுவிடமுடியாது.

சிறீமா அரசாங்க காலத்தில் ஏற்படுத்தப்பட்ட உள்நாட்டு உற்பத்திகள், தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கிய செயற்பாடுகளை எந்த எந்த அரசாங்கங்கள் புறந்தள்ளினவோ அவர்கள் அனைவரும் எமது நாடு தற்போதுள்ள நிலைக்கு காரணமானவர்களே.

-உலக சந்தையில் மதிப்பு இழந்துவிட்ட எது ரூபாயின் பெறுமதியை எப்படி உயர்த்துவது.

-மக்கள் முகம்கொடுக்கும் கொடுக்கப்போகும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும்.

*எமது நாட்டில்உள்ள வளங்களை உச்ச பயன்பாட்டிற்கு உட்படுத்தி எங்கெங்கு எவற்றைஎல்லாம் விளைவிக்க முடியுமோ அவற்றை விளைவித்து அவற்றை முறையாக பகிர்ந்து ஏற்படப்போகும் பஞ்ச நிலையை எதிர்கொள்ள தயாராகவேண்டும்.

மேற்கொண்டு அடுத்த கட்டமாக உள்நாட்டு உற்பத்தியில் தன்நிறைவுகாணவேண்டும். தொடர்ந்து எமது உற்பத்திகளுக்கு மதிப்புகூட்டி உலக சந்தைக்கு ஏற்றுமதிசெய்து சிறிது சிறிதாக எமது ரூபாய்க்கான பொறுமதியை உயர்த்தவேண்டும்.

-நடைமுறையில் எமது நாட்டு பிரஜைகள் என்ன செய்ய வேண்டும்.

1.இப்பொழுது உள்ள அரசாங்கம் மாறினால் எல்லாம் சரியாகிவிடும் என்று வெறுமனவே அரசாங்கத்தை மட்டும் குறைகூறிக்கொண்டிருப்பதை விட்டு நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஒருமித்த மனநிலைக்கு வரவேண்டும்.(சந்தர்ப்பவாதிகள் தமது இருப்பை தக்கவைக்க அப்பாவி மக்களை பகடைக்காய்களாக பாவிக்க முனைவார்கள்)

2.ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வீட்டுத்தோட்டம் வைத்திருப்பது அவசியம். அதில் மரவள்ளி, முருங்கை,கௌப்பி, இராசவள்ளி, வல்லாரை, வெண்டி,பாகல், வாழை,பயறு,உழுந்து, சோளம்,குரக்கன் முதலிய பயிர்களை செய்கை பண்ணவேண்டும். (ஒரு வேளை பசியை ஆற்றிக்கொள்ளவேனும் இவை எமக்கு உதவும்)

3.வீட்டிற்கு ஒரு பசு அல்லது ஆடு மற்றும் கோழி வளர்க்கவேண்டும்.
(எவ்வளவுதான் விலை அதிகரித்தாலும் ஒரு கட்டத்தின் பின் பால்மாமுதலிய இறக்குமதிப்பொருட்களை இறக்குமதிசெய்வதென்பது முடியாமல் போகும்)

4. இயன்றவரை பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தவேண்டும். (எம்மால் அருகிலுள்ள ஒரு இடத்திற்கு நடந்து அல்லது சைக்கிளில் செல்ல முடியுமானால் நடந்து ,சைக்கிளில் செல்லவேண்டும். உங்களது இந்த தியாகத்தின்மூலம் நாட்டில் சேமிக்கப்படும் எரிபொருளால் ஒரு நோயாளர் காவுவண்டி இயங்கி பெறுமதிவாய்ந்த பல உயிர்களை காப்பாற்ற முடியும் அல்லவா. அல்லது விவசாய இயந்திரங்கள்மூலம் கணிசமானோருக்கான உணவுற்பத்தியை மேற்கொள்ளமுடியுமல்லவா.

5. இளைஞர்கள் மற்றும் தொழில் முயர்ச்சியாளர்கள் இணைந்து ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வளங்களை இனங்கண்டு அவற்றின் கிடைப்பனவின் அடிப்படையில் அது சார்ந்த உற்பத்தி சாலைகளை கிராமங்கள் தோறும் ஆரம்பிக்கவேண்டும்.

ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தியினால் மாத்திரமே எமது நாட்டின் ரூபாவின் பெறுமதியை உயர்த்தமுடியும் அதேவேளை ஏற்படவிருக்கும் உணவு பஞ்சத்தையும் எதிர்கொள்ளலாம்.
இவையனைத்தும் சிறியவனாகிய சாதாரண இலங்கைநாட்டு குடிமகனாகிய எனது மனதில் தோன்றிய சிந்தனைகள் மட்டுமே.
எனவே பெரியவர்கள், சான்றோர்கள் இதிலுள்ள பிழைகளை பொறுத்து மன்னித்தருள்க….
(இ.ஷாமிலன்)

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்