இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளது.
நிலையான வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், நிலையான கடன் வசதி வீதத்தை 14.50% ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட் டதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை கணிசமானளவு இறுக்கமடையச் செய்கின்றது
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிறல் 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
கூட்டுக் கேள்வி கட்டியெழுப்பப்படுதல், உள்நாட்டு நிரம்பல் இடையூறுகள், செலாவணி வீத தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் பண்டங்களின் உயர்வடைந்த விலைகள் போன்றவற்றினால் உள்நாட்டில் எதிர்வரும் காலத்தில் பணவீக்க அழுத்தங்கள் மேலும் கடுமையடையக் கூடுமென்பதனைக் கரிசனையில் கொண்டு நாணயச் சபையானது பொருளாதாரத்தில் மேலதிகக் கேள்வித் தூண்டல் பணவீக்க அழுத்தங்கள் கட்டியெழுப்பப்படுவதனை இல்லாதொழிப்பதற்கும் மோசமான பணவீக்க எதிர்பார்ப்புக்கள் உயர்வடைவதனை முன்கூட்டியே தடுப்பதற்கும் செலவாணி வீதத்தினை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் உத்வேகத்தினை வழங்குவதற்கும் வட்டி வீதக் கட்டமைப்பில் அவதானிக்கப்பட்ட ஒழுங்கீனங்களினைத் திருத்தியமைப்பதற்கும் கணிசமான கொள்கைப் பதிலிறுப்பு இன்றியமையாததெனினும் கருத்தினைக் கொண்டுள்ளது.
The Central Bank of Sri Lanka Significantly Tightens its Monetary Policy Stance to Stabilise the Economy
The Monetary Board of the Central Bank of Sri Lanka, at its meeting held on 08 April 2022, decided to increase the Standing Deposit Facility Rate (SDFR) and the Standing Lending Facility Rate (SLFR) of the Central Bank by 700 basis points to 13.50 per cent and 14.50 per cent, respectively, effective from the close of business on 08 April 2022. The Board, having noted the inflationary pressures that could further intensify in the period ahead, driven by the build-up of aggregate demand, domestic supply disruptions, exchange rate depreciation and the elevated prices of commodities globally, was of the view that a substantial policy response is imperative to arrest the buildup of added demand driven inflationary pressures in the economy and preempt the escalation of adverse inflationary expectations, to provide the required impetus to stabilise the exchange rate and also to correct anomalies observed in the market interest rate structure.
Published Date:
Friday, April 8, 2022
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com