ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெரும்பாலான கிராமங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றன. குடியிருப்பாளர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் உற்பத்திசெய்தனர். ஆனால் உலகமே இப்போது ஒரு கிராமமாக இருந்தாலும் நவீன தேசிய அரசுகள் தன்னிறைவு பெறுவது அரிது. அவர்கள் தங்கள் மிகையான உற்பத்தியை ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டு கையிருப்புக்களை சம்பாதித்து சேமிக்கிறார்கள்.
மேலும், அவர்கள் தங்கள் பற்றாக்குறைகளை மறைக்க இறக்குமதி செய்கிறார்கள். இலங்கையின் தற்போதைய பிரச்சினை என்னவென்றால், வெளியுலகில் இருந்து தனக்குத் தேவையானதை வாங்குவதற்கு போதுமான பணம் இல்லையென்ப தாகும்.
இப்போது அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதிசெலவை ஈடுசெய்வதற்காக, இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் டொலர் கடனை இலங்கை நாடியுள்ளது, பல தசாப்தங்களின் பின் நாடு அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக , செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறி வரும் இலங்கையை மீட்க இந்தியா ஏற்கனவே உறுதியளித்துள்ள 1 பில்லியன்டொலர்களுக்கு இது மேலதிகமானதாகும் .
இது எவ்வளவுக்கு தீங்கானது ?
அந்நிய செலாவணி கையிருப்பு 2020 ஜனவரி முதல் 70 சதவீதம் குறைந்துள்ளது. இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு பெப்ரவரியில் 2.31 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்து 2021 டிச ம்பர் முதல் ஜனவரி 2022 வரை 779 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இது இலங்கையின் இறக்குமதியை நிறுத்தியதுடன் பல அத்தியாவசிய பொருட்களின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. நாணயம் கணிசமானஅளவு மதிப்பிழப்புக்கு உட்பட்டுள்ளது. சர்வதேசமட்டத்தில்தாராளமானமுறையில் கடன் வழங்குபவர்களைக் கண்டுபிடிப்பதற்கான அதன் முயற்சிகள் அதிகளவுக்கு வெற்றிபெறவில்லை.
இலங்கையின் கடன்
சர்வதேச நிதி நிறுவனமொன்று அல்லது குழுவிடமிருந்து நாட்டிற்கு முறையான மீட்பு பொதி வழங்கப்படாவிட்டால், இலங்கையின் கடன் சுமை நாட்டினால் சமாளிக்க முடியாததாகிவிடும்.
2022 இல் இலங்கை சுமார் 7 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஜூலையில் முதிர்ச்சியடையும் சர்வதேச இறைமைப் பத்திர வடிவில் 1 பில்லியன்டொலர் ஆகும்.
இலங்கையின் அரச கடன் 2019 இல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி டி பி ) 94 சதவீதத்திலிருந்து 2021இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 119 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் மார்ச் மாத தொடக்கத்தில் தெரிவித்துள்ளது.
சர்வதேச தரமதிப்பீட்டு முகவர் நிலையங்கள் இலங்கையின் கடன் மதிப்பீடுகளை குறைத்துள்ளன. இந்த ஆண்டு இலங்கை தனது 51 பில்லியன் டொலர் இறைமை கடனை செலுத்த முடியாமல் போகலாமென சந்தை அவதானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்திய உதவி
அரிசி, கோதுமை மா, பருப்பு வகைகள், சீனி மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிசெலவை நிவர்த்திசெய்வதற்கு கடன் உதவியை நீடிப்பதாக இந்தியா இலங்கைக்கு உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு
1 பில்லியன்டொலர் கடன் உதவிகளைத் தவிர, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா 400 மில்லியன்டொலர் நாணய பரிமாற்றத்தையும், எரிபொருள்களை வாங்குவதற்காக மற்றொரு 500 மில்லியன்டொலர் கடன் உதவியையும் நீடித்துள்ளது.
இது 2021 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் டொலராக இருக்கும் சீன நாணய பரிமாற்ற வசதிக்கு மேலதிகமாகவுள்ளது.
இலங்கையில் வாழ்க்கைநிலை
இலங்கையர்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர். உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் உட்பட எந்த வகையான இறக்குமதிக்கும் நிதியளிக்க அதன் வங்கிகளால் டொலர்களைப் பாதுகாக்க முடியவில்லை.
கோவிட் -19 தொற்றுநோய் 2020ஜனவரி முதல் அதன் பொருளாதார துயரங்களை மோசமாக்கியது, அதன் பிறகு கொரோனா வைரஸ் ஷெல் பரவியது இவை உலகத்தை தனித்தனி பகுதிகளாக களாக மாற்றியது.
விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் ஒவ்வொன்றும் பணவீக்க வீத்தில் புதிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. பெப்ரவரியில் பணவீக்கம் 17.5 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஜனவரி மாத பணவீக்க விததமான 14 சதவீதத்திற்கு மேல் ஏற்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதால், அரசாங்கம் கடுமையான பங்கீட்டை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உதாரணமாக, ஒரு நாளைக்கு ஒரு லீற்றர் பாலுக்கு மாறாக, ஒரு இலங்கையர் ஒரு நாளைக்கு 400 மில்லி லீற்றர் பாலை மட்டுமே வாங்க முடியும்.
இலங்கையின் நகரங்கள் தினசரி ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டை எதிர்கொள்கின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பெட்ரோல்-டீசல் வாங்குவதற்கு மக்கள் கிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது..
இன்றைய பிரச்சனை அல்ல நெருக்கடியானது ஒரு கண் சிமிட்டும் நேரத்தில் வந்துவிடாது. இலங்கையின் பொருளாதாரம் பல வருடங்களாக கட்டமைப்பு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தீர்வுகாண்பதற்கு குறுக்குவழிகளை எடுத்தன .
உதாரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு அரசாங்கமும் திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யாமல் இறைமைப் பத்திரங்களை வெளியிட்டன . அதன் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்தது, ஆனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மூலமாக அல்லாமல், ஆனால் வெளிநாட்டு நாணயங்களை கடன் வாங்குவதன் மூலமாகும்.. இதனால் அதன் அந்நிய செலாவணி கையிருப்பு சந்தை அதிர்ச்சிகளால் பாதிக்கப்படக்கூடியதாக அமைந்தது.
2019 இல், இலங்கை அரசாங்கம் கணிசமான வரிக் குறைப்புகளை அறிவித்தது, அது அதன் வருவாயைக் குறைத்தது. சீனாவுடனான அதன் கடன் ஏற்பாடுகளும் இந்த நெருக்கடிக்கு பங்களித்தன. கடந்த தசாப்தத்தில் 5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சீனக் கடனில் பெரும்பாலானவை துறைமுகங்கள், விமான நிலையம் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற குறைந்த வருமானத் திட்டங்களுக்குச் சென்றன
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, வெளிநாடுகாளி பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் சுற்றுலாத் துறை நடைமுறையில் வீழ்ச்சிகண்டது. சுற்றுலாத்துறை இலங்கைக்கு அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றாகும். ஆனால் 2019 இல்உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பிறகு இந்தத் துறை பாதிக்கப்பட்டது. அது மீண்டு வருவதற்கு முன்பே, கோவிட்-19 தொற்றுநோய் உலகை கடுமையாகத் தாக்கியது.
கோவிட் தொடர்பான தடைகளை நீக்கத் தொடங்கியபோது, ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது, இது பெப்ரவரி நடுப்பகுதி வரை சுமார் 25 சதவீதமாக இருந்தது. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் அதன் விளைவாக ரஷ்யாவில் வங்கிகள் மீதான பொருளாதாரத் தடைகள் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பாரம்பரிய சுற்றுலா ஆதாரங்களான இந்தியா, சீனா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனி ஆகியவை கோவிட்டுக்கு முன்னைய நிலைக்கு மீளவில்லை.
கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்புகளை அம்பலப்படுத்தியது டன் இந்த நிதி குழப்பத்திலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது பற்றி தெரியாமல் இருக்கும் சூழ்நிலையில் இலங்கையை வைத்துள்ளது .
இந்தியா ரு டே – பிரபாஷ் கே .தத்தா
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com