இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியது பஹ்ரைன்!

இலங்கையை கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து பஹ்ரைன் நீக்கியுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பஹ்ரைன் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியது.

இந்நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பஹ்ரைனில் தொழில் அனுமதியை பெற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 24ஆம் திகதி முதல் இந்த அனுமதி மறுப்பு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )

சிறப்புச் செய்திகள்