நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்துவைக்கப்பட்டுள்ள ரஷ்ய எரோஃப்ளொட் விமானம் தொடர்பில் சட்டமா அதிபர் நீதிமன்றில் இன்று மனுவொன்றின் மூலம் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார்.
191 பயணிகள் மற்றும் 32 பணிக்குழாமினருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த விமானம் கடந்த இரண்டாம் திகதி வந்தடைந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டது.
குத்தகை பிரச்சினை காரணமாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த பயணிகள் வேறு விமானங்கள் ஊடாக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை காரணமாக, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வணிக விமான சேவைகளை ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
UPDATE – ஏரோஃப்ளொட் வழக்கை திறந்த மன்றுக்கு மாற்ற கோரி சட்டமா அதிபர் மனு தாக்கல்
ஏரோஃப்ளொட் ரஷ்ய விமானம் குறித்த வழக்கை திறந்த நீதிமன்றுக்கு மாற்ற அனுமதிக்குமாறு கோரி, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம், தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு, குறித்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் உள்ள சட்டப்பின்னணி என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
191 பயணிகள் மற்றும் 30 பணிக்குழாமினருடன் கடந்த 2ஆம் திகதி ரஷ்ய நோக்கி பயணிக்கவிருந்த விமானம் கட்டுநாயக சர்வதேச விமான நிலையத்தில் தடுக்கப்பட்டது.
இதன்காரணமாக ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கான வர்த்தக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த ‘எரோஃப்ளொட்| விமானம் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, ‘எரோஃப்ளொட்| விமானம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ரஷ்யாவுக்கான இலங்கை வர்த்தக மற்றும் தொழிற்சங்கவியலாளர்களின் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான 7 நடவடிக்கைகள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை சுற்றுலா சேவை வழங்குனர் சங்கம் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்து கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் வரை பேரணியாக சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com





