இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார சூழலால், இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஆடைகளுக்கான முன்பதிவுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில், திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி, 33,525 கோடி இந்திய ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், உலக அளவில் இந்திய தைக்கப்பட்ட ஆடைகளின் பங்களிப்பு 4 சதவீதமாகவும், இலங்கையின் பங்களிப்பும் 4 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும், நெருக்கடியான பொருளாதார சூழல், இந்திய தொழில்துறைக்கு சாதகமான அம்சங்களாக மாறலாம்.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா முதலான நாடுகளின் முன்பதிவுகள் திருப்பூருக்கு கிடைக்கும்.
இலங்கைக்கு செல்லும் முன்பதிவுகள் இந்தியாவுக்கு கிடைக்கப்பெற்றால், பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான வர்த்தகம் திருப்பூருக்கு கிடைக்கும் என்றும், அதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுவதாகவும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com