இலங்கையில் 60 % விகிதமான சிற்றுண்டிச்சாலைகளுக்கு பூட்டு

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள 60 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர்களில் மாத்திரம் சுமார் 1,500 சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அரச வைத்தியசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளை இன்றைய தினம் முதல் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மின்சார பிரச்சினை காரணமாக குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட வேண்டிய உணவுகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றது.

இதனால் தமது தொழிற்துறையினர் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்