ரஷ்யாவின் ‘எரோஃப்ளோட்’ விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு ரஷ்யா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்தா அபேவிக்ரம லியனகே அந்த நாட்டின் வெளிவிகார அமைச்சுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்ய ‘எரோஃப்ளோட்’ விமானத்தின் சகல பயணிகளும் இன்றும், நாளையும் அந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என இலங்கையில் உள்ள ‘எரோஃப்ளோட்’ நிறுவனத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மொஸ்கோவ் நோக்கிப் பயணிக்கவுள்ள விமானங்களில் குறித்த பயணிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குத்தகை பிரச்சினை காரணமாக ரஷ்யாவின் ‘எரோஃப்ளோட்’ விமானம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி ரஷ்ய விமான நிறுவனத்தினால் கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு எதிர்வரும் 8ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com





