இலங்கையில் அவசரகால நிலைமை சர்வதேசம் அதிருப்தி

அவசரகால நிலைமை சட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு சர்வதேசம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

குறித்த டுவிட்டர் பதிவில் , ‘மக்கள் அமைதியான முறையில் எதிர்ப்பினை வெளியிடுவதற்கான ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் நிலைமையை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை அவசரகால சட்ட நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் அவரது டுவிட்டர் பதிவில் , ‘அவசர நிலைமை ஏற்பட்டுள்ளமை இலங்கை மக்களுக்கேயன்றி அரசாங்கத்திற்கு அல்ல.

மக்கள் எதிர்கொண்டுள்ள அவசரகால நிலைமையின் அடிப்படையிலேயே அவர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். மாறாக அவர்கள் வீதிக்கு இறங்கியமையால் அவசரகால நிலைமை ஏற்படவில்லை. ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்