மார்ச் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு, 1.93 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கியின் தரவுகளில் இதனை அறியக்கூடியதாக உள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு, 2.3 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டிருந்து.
இந்த நிலையில், கடந்த மாதத்தில் கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் 2.02 பில்லியன் டொலராக காணப்பட்ட வெளிநாட்டு ஒதுக்கம், மார்ச் மாதம் 1.72 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், பெப்ரவரியில் 98 மில்லியன் டொலராக காணப்பட்ட தங்க கையிருப்பு, மார்ச் மாதம் 29 மில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது.
இதற்கமைய, கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 16.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்துள்ளது. இந்த ஆண்டில் நாளொன்றில் அச்சிடப்பட்ட அதிகூடிய பணத்தொகை இதுவாகும் என மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 2022ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நிதி சந்தைக்கு இணைக்கப்பட்ட பணத்தொகை 432.77 பில்லியனாக உயர்வடைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com