இலங்கையின் கார்களின் விலை வீட்டின் விலையை விட அதிகம்

இலங்கையில் பயன்படுத்தப்படும் கார்கள் தற்போது தங்கத்தை ஒத்ததாக இருப்பதாக சர்வதேச ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏஎப்பி(AFP) இன் அண்மைய அறிக்கையின்படி, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யால் கார்களின் விலைகள் வீட்டு விலைகளை விட அதிகமாக உயர்ந்துள்ளன.

22 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு வங்குரோத்து நிலையின் விளிம்பில் உள்ளது. பண வீக்கம் அதிகமாக உள்ளதுடன் உணவு, மருந்து மற்றும் எரிபொருளை வாங்குவதற்குத் தேவையான டொலர்களை சேமிக்க அரசாங்கம் ‘அத்தியாவசியமற்ற’ இறக்குமதிகளைத் தடை செய்துள்ளது.

வாகனச் சந்தையில், இந்த இரண்டு வருடத் தடையானது இலங்கையின் வீதிகளில் இருந்து, தொழிற்சாலைகள் அண்மையில் வழங்கிய கார்களை நீக்குகிறது மற்றும் பயன்படுத்திய கார்களுக்கு உலகிலேயே அதிக விலையைச் செலுத்த வாங்குபவர்களை கட்டாயப்படுத்துவதாக அறிக்கை கூறுகிறது.

ஐந்து வருட பழைமையான டொயோட்டா லேண்ட் குரூஸர் தற்போது 62.5 மில்லியன் ரூபா (312,500 டொலர்) விலைக்கு விற்கப்படுகிறது, இறக்குமதிக்கு முந்தைய விலையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதுடன் நடுத்தர வர்க்கத்தினர் கொழும்பில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com

சிறப்புச் செய்திகள்