இலங்கை நிதியுதவி கோரினால் பேச்சுவார்த்தைக்கு தயார்: சர்வதேச நாணய நிதியம்!

டொலர் பற்றாக்குறையினாலேயே எண்ணெய்க்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடன் பிரச்சினைகளால் டொலர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கம் நிதி உதவி கோரினால், இலங்கையுடன் மாற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் இதுவரை நிதியுதவி கோரவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி, AFP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனை பெற இலங்கை தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த விடயம் குறித்து வேறு விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சின் புதிய பொருளாதாரப் பிரிவின் பொருளாதார திறனைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கும் பொதுவான செயற்பாடு அதுவென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையிடமிருந்து நிதி உதவி கோரிக்கையை இதுவரை பெறவில்லை – IMF

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அரசாங்கத் திடம் இருந்து நிதி உதவிக்கான கோரிக்கையை இதுவரை பெறவில்லை என இலங்கைக்கான அதன் செயற்பாட்டுத் தலைவர் மசாஹிரோ நொசாகி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில், இவ்வாறான கோரிக்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் ஆலோசித்து தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எனினும், இது சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் தொழில்நுட்ப ஒத்துழைப்புச் செயற் பாடாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கான செயற்பாட்டுத் தலைவர் மசாஹிரோ நொசாகி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் பொருளா தார மற்றும் கொள்கை அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இரு தரப்பு பேச்சுவார்த்தை களுக்காக தூதுக்குழு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் அண்மைய பொருளாதாரத் தரவுகளை மீளாய்வு செய்வதற்கான பணிப்பாளர் சபை கூட்டம் இம்மாத இறுதியில் இடம்பெறும் எனவும் மசாஹிரோ நொசாகி தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்