இலங்கைக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏலவே இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள் கடனுதவியை இந்திய அரசாங்கம் வழங்கி இருந்த நிலையில், இன்று மேலும் 500 மில்லியன் டொலர் கடன் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவரச எரிபொருள் கொள்வனவுக்காக இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இன்னும் ஒரு பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இந்தியாவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க இணங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com