நாட்டின் கடற்பரப்பில் கடந்த 6 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ள எண்ணெய் கப்பலுக்கு செலுத்த வேண்டிய 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை விநியோகிப்பதற்கு அரச மற்றும் தனியார் வங்கிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எண்ணெய் கப்பலுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் எரிபொருள் தரையிறக்கல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பொது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின் நாட்டுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 4 எண்ணெய் கப்பல்கள் வருகை தர வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிபொருள் விநியோகம் மோசமான நிலைமையினை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் 20 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல்,20 ஆயிரம் மெற்றிக்தொன் விமான எரிபொருள் அடங்கிய எண்ணெய் கப்பலுக்கு கொள்முதல் கட்டணமாக 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அக்கப்பல் கடந்த 6 நாட்களாக நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
எரிபொருள் கொள்முதலுக்கு கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் குறித்த கப்பலுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 19ஆயிரம் டொலர்கள் தாமத கட்டணம் மேலதிகமாக செலுத்தப்பட வேண்டும்.
நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு செலுத்த வேண்டிய 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனியார் வங்கி ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு மத்திய வங்கி வலுசக்தி அமைச்சுக்கு அறிவித்ததை தொடர்ந்து வலுசக்தி அமைச்சுக்கும்,தனியார் வங்கி பிரதானிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
6 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ள எண்ணெய் கப்பலுக்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த தனியார் வங்கிகள் மறுப்பு தெரிவித்ததால் எரிபொருள் தரையிறக்கம் மற்றும் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என நாட்டு மக்கள் முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின் ஒரு நாளைக்கு மாத்திரம் நாட்டுக்கு 4 எண்ணெய் கப்பல்கள் வருகை தர வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com